Categories
உலக செய்திகள்

காபி குடித்துக்கொண்டிருந்த நபர்….. திடீர்னு வந்த டொயிங் சத்தம்…. வாழ்க்கையே தலைகீழாக மாறிய ஆச்சர்யம்….!!!!

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் காபி குடித்திக் கொண்டிருந்த போது வந்த மின்னஞ்சல் மூலமாக வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறி உள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Richard Noronha(51). இவர் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டில் காபி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்தபடியே அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட் மகிழ்ச்சியில் மெய்மறந்து போய் உள்ளார்.

இதற்கு காரணம் என்னவென்றால் லாட்டரி நிறுவனம் ஒன்றில் இருந்து வந்த அந்த மெயிலில் அவர் இந்திய மதிப்பில் சுமார் 79 லட்சம் ரூபாய்க்கு மேல் வென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்த அவர் கூறுகையில் இந்த பெரிய தொகை தனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பரிசு பணத்தை கொண்டு தானும், தன்னுடைய மனைவியும் சேர்ந்து தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை கொடுக்க திட்டம் போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |