வெளிநாட்டு பெண்கள் 2 பேரை கொலை செய்த வழக்கில் நேபாள நாட்டில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவரது முதுமையை கருத்தில் கொண்டு நேபாள சுப்ரீம் கோர்ட் தற்போது விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சோப்ராஜ் நேற்று பாரீஸ் சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில் பிரான்சில் உள்ள சோப்ராஜன் வக்கீல் இசபெல் கவுட்டன்ட் கூறியதாவது, சோப்ராஜ் சுதந்திரம் பெற்றதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் இனி ஓய்வு எடுப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ் சினிமா தயாரிப்பாளர் ஜூன் சார்லஸ் டெனியு ,சோப்ராஜின் வாழ்க்கையின் அடிப்படையிலான ஒரு திரைப்படத்தையும், நூலையும் வெளியிட இருக்கிறார். நேபாள நாட்டில் ஆயுள் தண்டனையில் இருந்த சார்லஸ் விடுதலை பெற்று விட்டாலும் பிரான்சில் அவர் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா என்பது குறித்து அந்த நாட்டு அரசு கருத்து தெரிவிக்கவில்லை.