மனித உடலில் காது என்பதை மிக முக்கியமான உறுப்பு. ஒலியை கேட்பதற்கு மட்டுமல்ல நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும் கூட காதுகள் மிகவும் அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சு திறனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த காது மாசடைந்த சூழல், ஒலி மாசு, சுய சுத்தம் குறைவு மற்றும் மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் போன்ற பல்வேறு காரணங்களால் காது பிரச்சினைகள் தற்போது அதிக அளவில் உள்ளன. காதுகளில் ஏற்படும் நோய்களில் முக்கியமானது காது வலி, காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீல் வடிவது, அழுக்கு அல்லது அன்னிய பொருள்கள் அடைத்துக் கொள்வது,எறும்பு போன்ற பூச்சி உள்ளே புகுவது மற்றும் காதில் அடிபடுவது போன்றவற்றால் காது வலி வரக்கூடும்.
மூக்கில் ஏற்படும் ஒருசில பிரச்சினைகள் காரணமாகவும் காது வலி ஏற்படும். மூக்கிலிருந்து தண்ணீர் மாதிரி சளி முதலில் வரத் தொடங்கும். அதனை கவனிக்கத் தவறினால் நாளடைவில் மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டி கட்டியாக வரும். கட்டாயம் இப்போது சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அந்த சாலையில் உள்ள கிருமிகள் தொண்டையையும் நடு காதையும் இனைக்கின்ற ஈஸ்டாக்கியன் குழல் வழியாக நடு காதுக்குச் சென்று சீ வடியும். கண்டிப்பாக அது கேட்கும் திறனை பெரிதும் பாதிக்கும். எனவே ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று விடுவது மிகவும் நல்லது.
அவ்வாறு செய்யா விட்டால் நாளடைவில் காது அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்படும். உங்களின் காது சரியாக கேட்க வேண்டுமானால் அதனை எப்போதும் சீராக வைத்திருக்க வேண்டும். காதுக்குள் ஒருவிதத் திரவத்தை சுரந்து குறும்பியாக மாறி செவிப்பறையை அது பாதுகாக்கிறது. காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அன்னியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையை பாதிப்பதை தடுப்பது இந்த குரும்பி தான். எனவே அதனை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே மெல்ல மெல்ல வெளியில் அது வந்துவிடும்.
அந்தக் குரும்பியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதை மூன்று வழிகளில் அகற்றலாம். நம்முடைய கண்ணுக்கு எளிதில் தெரியும்படி உருண்டையாக திரண்டிருக்கும் குரும்பியை ஊக்கு கொண்டு அகற்றலாம். காதின் உட்புறமாக குறும்பி சிலருக்கு ஒட்டிக்கொண்டிருக்கும். காதில் இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் சில நாட்களுக்கு விட்டால், சில நாட்களில் தானாகவே அதை வெளி வந்துவிடும். அப்படி வரவில்லை என்றால் சிரஞ்சி மூலம் தண்ணீரை பீச்சி அடித்து அகற்ற வேண்டும்.
ஆனால் இதற்கு மருத்துவர்கள் தான் உதவ வேண்டும். ஒருவேளை உங்களின் காதுக்குள் ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனே நாம் கையிலெடுக்கும் பொருள் பட்ஸ் தான். இதைப் பயன்படுத்தி குரும்பியை எடுக்கும் போது இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி விடுமே தவிர வெளியில் கொண்டு வராது. அதற்கு மாறாக செவிப்பறையை தாக்கி புண்ணாக்கிவிடும். ஆகவே இதனை கையில் தொடவே கூடாது. இன்னும் சிலர் மூக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், தீக்குச்சி,சாவி போன்ற கையில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் காதுக்குள் நுழைந்து குடைவார்கள். இந்த பழக்கம் அப்படியே நீடித்தால் செவிப்பறை பழுதடைந்து நாளடைவில் காது கேட்காமல் போகும்.
மேலும் காதுக்குள் புகுந்த ஏதாவது ஒரு பொருள் கண்ணுக்கு தெரிந்தால் தலையை சாய்த்து பொருளை கீழே விழ வைக்கலாம் அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கான உரிய கருவியால் வெளியில் எடுப்பது நல்லது. ஒருவேளை காதில் எறும்பு போன்ற பூச்சி ஏதாவது புகுந்தால் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சில சொட்டுகள் விட்டால் பூச்சி அதில் இறந்து விடும். அதன் பிறகு சில சொட்டுகள் தண்ணீர் விட்டு தலையை சாய்த்தாள் பூச்சி வெளியில் வந்து விடும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெய்யை காதுக்குள் ஊற்றக் கூடாது. அப்படி ஊற்றினால் காதை பாதிக்கும். காது வலி, காது அடைப்பு,காது இரைச்சல் என்று காதல் பிரச்சினை எதுவாக இருந்தாலும் உடனே காதில் ஒரு சொட்டு மருந்தை உட்கொள்வது சிலருக்குப் பழக்கம். அதனால் அவர்களுக்கு ஆபத்து வரும். நம் காது எப்போதுமே உலர்ந்த தன்மையுடன் இருக்க வேண்டும். அதில் அவசியமில்லாமல் மருந்து மற்றும் எண்ணெய் என்று எதையாவது ஊற்றி ஈரமாக வைத்திருந்தால் காற்றில் கலந்து வரும் பூஞ்சைக் கிருமிகள் உட்கார்ந்து கொள்ளும்.
அது அரிப்பை உண்டு பண்ணும். காது எப்போதும் அடைத்த மாதிரி இருக்கும். காது வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே தேவைப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு காதில் சொட்டு மருந்து ஊற்றுங்கள்.நீங்களாக எப்போதும் எந்த மருந்தையும் காதுக்குள் ஊற்றக் கூடாது. சிலருக்கு அதிநவீன சத்தத்தை கேட்கும் போது காது கேட்காமல் போகலாம். இதனை தடுப்பதற்கு காதில் பஞ்சை வைத்துக் கொள்ளுங்கள் .