காது வலியால் மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் காதில் இருந்து கரப்பான் பூச்சியை எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்த chen என்பவர் காது வலியால் சில நாட்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சியாகியுள்ளனர் காரணம் அவரின் காதில் ஒரு மஞ்சள் நிற கரப்பான் பூச்சி இருந்ததை கண்டறிந்துள்ளனர்.பின்னர் otoscope முறையில் அந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்துள்ளனர்.
மேலும் இந்த கரப்பான் பூச்சியை சரியான நேரத்தில் வெளியே எடுக்கவில்லையெனில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று Yi என்ற மருத்துவர் கூறியுள்ளார். இதுகுறித்து chen கூறுகையில் நமச்சல் காரணமாக தன்னுடைய காதில் குச்சியை செலுத்தும் போது அடிக்கடி ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதாகவும் அது கரப்பான் பூச்சியாக இருந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து மருத்துவர் கூறுகையில் chen தூங்கும்போது அவர் காதில் கரப்பான் பூச்சி சென்றிருக்கலாம் என்று நம்புவதால் வீட்டில் பூச்சிகளை விரட்டும் மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துமாறு அவர் கூறியுள்ளார்.