இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி கேட் திருவள்ளுவர் நகரில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்து விழாவுக்கு உறவினர்களை அழைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் நந்தினி அறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மனைவியை சமாதானப்படுத்துவதற்காக தனபால் அறைக்கு சென்றுள்ளார். அப்போது நந்தினி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து தனபால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.