நடிகர் அஜித் காதுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் அஜித் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கின்றார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படமான வலிமை கலவையான விமர்சனங்களோடு வசூல் அளவில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்குகின்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்ற நிலையில் இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் அஜித் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பார். ஏதேனும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றால் சுரேஷ் சந்திரன் மூலம் தெரிவிப்பார். தற்பொழுது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். சுரேஷ் சந்திரன் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ரசிகர்கள் தங்கள் காதுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அட்வைஸ் செய்திருக்கின்றார். இந்த ட்விட்டர் பதிவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
“Protect your ears”
Unconditional love always – Ajith pic.twitter.com/qd543owHDt— Suresh Chandra (@SureshChandraa) August 20, 2022