வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலு மூடு பகுதியில் கனகராஜ்-அனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகராஜ் இறந்து விட்டதால் அனிதா தனது மகன்களான அல்ஜின் ஷால்(22), ஆண்ட்ரோ ஷால் ஆகிருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறையில் ரேடியாலஜி பிரிவில் டிப்ளமோ படித்து முடித்த அல்ஜின் ஷால் வேலை கிடைக்காததால் தற்போது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் தூங்குவதற்காக சென்ற வாலிபர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அனிதா. அக்கம் பக்கத்தில் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தனது மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த இந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அல்ஜின் ஷாலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் காதல் விவகாரத்தினால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.