பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கேலி செய்யும் விதமாக கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கேலி செய்யும் விதமாக கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து, “என் பாட்டு வழியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள், காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதனை இணையவாசிகள் வேகமாக சமூக வலைத் தளங்கள் அனைத்திலும் பரப்பி வருகிறார்கள்.