ஆந்திர மாநிலம், திருப்பதியில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக வனத்துறையினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த அவர்கள், அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியை கொண்டு அதனை பெண் என உறுதி செய்தனர். பிறகு அந்த பகுதியில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது புங்கனூர் மண்டலத்தில் உள்ள ராமசாமுத்திரத்தைச் சேர்ந்த அலிபிரி என்ற பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மாயமானது தெரியவந்தது.
பிறகு அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, புவனேஸ்வரியின் கணவர் அவரை வீட்டிலிருந்து கொலை செய்து உடலை மருத்துவமனையின் வளாகத்தின் பின்புறத்தில் சென்று எரித்து அம்பலமானது. முதலில் வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் அவரது உடலை சூட்கேசில் எடுத்து வந்து அங்கு வைத்து தீவைத்து எரித்துள்ளார். உறவினர்களிடம் ஸ்ரீகாந்த் தனது மனைவிக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் அங்கு இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவரது உடலை கொடுக்கவில்லை என்று கூறி நாடகம் ஆடியுள்ளார். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.