Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காதல் தொல்லை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபரின் காதல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழத்தெருவில் சினேகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சினேகாவை வாலிபர் ஒருவர் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சினேகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சினேகாவின் தம்பி சிபிராஜ் தனது அக்கா தூக்கில் தொங்குவதை கண்டு கூச்சலிட்டுள்ளார்.

இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சினேகாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சினேகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |