பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரபள்ளி பகுதியில் ஆதில்கான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆதில்கான் சோனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக சோனி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் சோனியின் வயிறு வலி குணமாகவில்லை.
இந்நிலையில் ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சோனியை உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து யாரச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சோனி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.