Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த தம்பதி….. ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தில் பவித்ரா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். அவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கொண்டாபுரம் காலணியை சேர்ந்த சௌந்தர்ராஜன் (25) என்பவரை காதலித்து உள்ளார்.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சௌந்தரராஜன் வீட்டில் பவித்ராவும் சௌந்தர்ராஜனும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |