காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் ரயில்வேயில் எஞ்சின் கிளர்க்காக வேலை பார்க்கும் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை நவநீதகிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிறிஸ்வந்த் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவநீதகிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை திவ்யா தனது பெற்றோரிடம் அழுது கொண்டு கூறியுள்ளார்.
இதனை அடுத்து திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதனை அறிந்த போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து நவநீதகிருஷ்ணனும், அவரது தாயாரும் இணைந்து எங்களது மகளை கொடுமைப்படுத்தியுள்ளனர் எனவும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் திவ்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.