காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரின் தாயை பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி அருகே இருக்கும் கிழக்கு அபிராமத்தை சேர்ந்த சண்முகம்- ராக்கு தம்பதியினருக்கு வினோத்குமார் என்ற மகனும் முனீஸ்வரி என்ற மகளும் இருக்கின்றனர். சண்முகம் உயிரிழந்துவிட்டார். வினித்குமாரும் பக்கத்து வீட்டு கண்ணாயிரம் மகளும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
இதையடுத்து காவியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்கள். கண்ணாயிரம், வினோத்குமார் தனது மகனை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாக கருதி வந்த நிலையில் முத்துக்குமாரும் காவியாவும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்கள். இது பற்றி தெரிந்த கண்ணாயிரம் நேற்று முன்தினம் வினோத் குமாரின் வீட்டிற்கு சென்று அவரின் தாயிடம் தகராறில் ஈடுபட்ட பொழுது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கண்ணாயிரம் மிகவும் ஆத்திரமடைந்து அரிவாளால் ராக்குவை வெட்டினார். இதனை தடுக்க வந்த மக்கள் முனீஸ்வரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவத்தில் ராக்கு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் முனீஸ்வரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் முனீஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ராக்குவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கண்ணாயிரத்தை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.