கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓம் சதாவர் என்பவர் தங்கி தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியிலிருந்து ஓம் சதாவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதல் விவகாரம் காரணமாக கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.