Categories
சினிமா தமிழ் சினிமா

“காதல் கதையாக உருவாகி வரும் கவினின் டாடா”… வெளியான படத்தின் அப்டேட்…!!!!

கவின் நடிப்பில் உருவாகி வரும் டாடா திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புது படத்தில் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இணைந்து நடிக்கிறார். இந்த திரைபடத்தை அறிமுகம் இயக்குனரான கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.  ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றார். நவீனகால பின்னணியில் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பான ‘டாடா’ சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. இப்படத்தின் படபிடிப்பு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. மேலும் படக்குழு நவம்பர் 19ஆம் தேதி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றார்கள். ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |