இத்தாலியில் சுகாதார ஊழியர் ஒருவர் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலைச் சொல்லி அசத்தியுள்ளார்.
நம் காதலை காதலிப்பவரிடம் சொல்வதற்கு நமக்கு மிகவும் தயக்கம் உண்டு. அதிலும் குறிப்பாக ஆண்கள் காதலை பெண்களிடம் சொல்வதற்கு பல முயற்சிகளை செய்வார்கள். அதன்படி இத்தாலியில் சுகாதார ஊழியர் ஒருவர் தன் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை சொல்லி அசத்தியுள்ளார். இத்தாலியில் கியூசெப் என்ற சுகாதார ஊழியர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருவதால், தன்னுடைய கவச உடைக்கு பின்புறம் “கார்மெலி என்னை திருமணம் செய்து கொள்கிறாயா” என எழுதி அந்த படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, அவரது காதலியை அதில் டேக் செய்துள்ளார்.
அதனைக் கண்ட அவரின் காதலி கி உன்னை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் என்று பதிவிட்டுள்ளார். தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமன்றி இதை காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.