Categories
சினிமா தமிழ் சினிமா

காதலும் இல்லை…. வேற ஒன்னும் இல்லை…. முதன்முறையாக மனம் திறக்கும் நிதி அகர்வால்….!!!

நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கள் பேசப்பட்டதற்கு நடிகை நிதி அகர்வால் முற்று புள்ளி வைத்துள்ளார்.

தமிழில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கல் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். இதற்குப் பிறகு அவர் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஈஸ்வரன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழில் ஒரே நேரத்தில் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி படத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து  சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி  பிரபலமாகிவிட்டார் நிதி அகர்வால். மேலும் உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி உருவாகும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். தற்போது பாலிவுட் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு புக் ஆகியுள்ளார். இந்நிலையில்  5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் படத்தில் நடிக்க உள்ள நிதி அகர்வால் தன் மார்க்கெட்டை பாலிவுட்டில் உயர்த்த திட்டமிட்டுள்ளாராம்.

சமீபத்தில் நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கள் பேசப்பட்டது. மேலும் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் போதே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்வதாக செய்திகள் வந்தன. இந்த வதந்திகளுக்கு  எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது நிதி அகர்வால் பல படங்களில் ஒப்பந்தமாகி இதன் மூலம் தனக்கு நடிப்பதை தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |