Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலுடன் உல்லாசம்”…. அழுத குழந்தைக்கு சூடு…. பாட்டி புகாரின் பேரில் இருவரும் கைது…!!!!!

கள்ளக்காதலுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் அவரின் காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரை சேர்ந்த பானு கணவரை பிரிந்து தனது 2 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் ஜோஸ் என்பவரை காதலிக்க ஆரம்பித்து, அவரோடு மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களின் காதல் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பெண் குழந்தை இடையூராக இருந்துள்ளது. இவர்கள் சேர்ந்து இருக்கும் பொழுது குழந்தை அழுவதால் எரிச்சலடைந்து குழந்தையை பானு அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அவரின்ன் காதலன் ஜெகன் ஜோசும் குழந்தையை சிகரட்டால் முகத்தில் சுட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

இவர்களின் தொடர் சித்திரவதை தாங்காமல் குழந்தை சென்ற 29-ஆம் தேதி மயங்கி விட்டது. பெண் குழந்தையின் மேல் தண்ணீர் தெளித்ததால் மயக்கம் தெளிந்தது. இதையடுத்து பானு குழந்தையை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனிடையே பானுவின் தாயார் செங்கல்பட்டில் இருந்து சென்னை வந்துள்ளார். குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறிந்து பார்த்த பொழுது குழந்தை முகத்தில் சிகரெட் சூடு, முதுகில் அடிபட்ட காயம் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பானு மற்றும் அவரின் காதலன் ஜெகன் ஜோஸ் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தார்கள். தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |