பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டம் பாலுவாடோலா கிராமத்தில் முன்னா ஷா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன்னா ஷாவின் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் முன்னா ஷா வீட்டில் சந்தேகப்படும்படி ரத்த கறையாக இருக்கிறது என்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்னா ஷாவின் காதல் விவகாரம் பிடிக்காததால் அவர்களது குடும்பத்தினரே அவரை கொலை செய்ததாக காவல்துறையினர் சந்தேகித்தனர்.
அதன்பின் முன்னாஷா குடும்பத்ததை சேர்ந்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதனிடையில் கொலை செய்யப்பட்ட உடலை இவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று ஆற்றங்களை காட்டுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் காவல்துறையினருக்கு எந்த தடயமும் கிடைக்காததால் இந்த வழக்கு அப்படியே இருந்தது. இந்நிலையில் முன்னா ஷா வீட்டில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் அவரது செல்போன் கிடைக்கவில்லை. இதனால் அவரது செல்போனை டிராக் செய்தால் ஏதாவது தடயம் கிடைக்கும் என்று காவல்துறையினர் கருதினர்.
அதன்படி செல்போனை டிராக் செய்து அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு முன்னா ஷா கிடைத்துவிட்டார். ஆனால் முன்னா ஷா கொலை செய்யப்படவில்லை என்றும் உயிருடன் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது முன்னா ஷா காதலை அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் அவர் வீட்டில் ரத்தக்கறை ஆக்கிவிட்டு சென்றுள்ளார். அதன் மூலம் தனது குடும்பத்திற்கு பாடம் கற்பிக்க இப்படி செய்துள்ளார். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னா ஷா குடும்பத்தினரை காவல்துறையினர் விடுத்தனர்.