ஆந்திர மாநிலம், சுரரெட்டிபாலம் பாலம் அருகே ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சுரரெட்டிபாலம் அருகே உள்ள ரயிலின் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். கொப்போலு பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் ரெட்டியும், வெங்கடேஸ்வரா காலனியை சேர்ந்த நாகினியும் நீண்ட நாள் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் அவர்களது வீட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் மனமுடைந்த காதல் ஜோடிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் பொறியியல் படிப்பு முடித்து உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவலர்கள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.