Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காதலியோடு டேட்டிங் போனும்” ரூ.300 அனுப்புங்க…. ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த கிரிக்கெட் வீரர்….!!!!

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர் அமித் மிஸ்ரா. இவர் ரசிகர் ஒருவரோடு ட்விட்டரில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். அப்போது அந்த ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு இவர் செய்த காரியமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் தன்னுடைய காதலியோடு டேட்டிங் செல்ல வேண்டும் என்று அமித் மிஸ்ராவிடம் 300 ரூபாய் பணம் அனுப்புங்கள் என்று வேடிக்கையாக கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ரசிகருக்கு கூகுள் பே மூலமாக 500 ரூபாய் அனுப்பி உள்ளார் அமித் மிஸ்ரா. மேலும் அந்த ஸ்கிரீன்ஷாட்டையும் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். தற்போது இதுகுறித்த இந்த உரையாடல் இணையத்தையே கலக்கி வருகிறது.

Categories

Tech |