Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலியுடன் தூக்கில் தொங்கிய மாணவர்…. கதறி அழுத தாய்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

காதலியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவில் செல்லம்பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உமா காயத்ரி(23), உமா கௌரி(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் முத்துலட்சுமி துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மகள்கள் கல்லூரி பரப்பை முடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முத்துலட்சுமி தனது மகள் உமா கௌரியும் மற்றொரு வாலிபரும் தூக்கில் சடலமாக துங்குவதை பார்த்த அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரச மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணுடன் தூக்கில் சடலமாக தொங்கியவர் மருங்கூர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பது தெரியவந்தது.

கடந்த சில வருடங்களாக உமா கௌரியும், மோகனும் காதலித்து வந்துள்ளனர். நேற்று மாலை உமா கௌரி வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவரை பார்ப்பதற்காக மோகன் அங்கு சென்றுள்ளார். அதன் பிறகு இருவரும் தற்கொலை செய்துள்ளனர். இதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மோகன் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |