வாலிபர் காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் செல்போன் டவர் பராமரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக கோபிநாதனும், அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவி கோபிநாதனுடன் சரியாக பேசவில்லை. மேலும் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபிநாதன் காதலியின் வீட்டிற்கு சென்று ஏன் என்னிடம் பேசுவதில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் உறவினர்கள் கோபிநாதனை மிரட்டியதோடு, இனி அவர் பேச மாட்டார்; எங்கள் வீட்டு பெண்ணை நீ மறந்து விடு என கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிநாதன் செல்போன் டவரில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் கோபிநாதன் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது காதலியை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால் அவர் என்னை தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு நபரை காதலிக்கிறார். எனது சாவுக்கு காதலியின் குடும்பத்தினர்தான் காரணம். அவர்களை சும்மா விட கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.