சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காந்தி நகரில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலாஜி அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் பாலாஜி அங்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் பாலாஜியை தட்டி கேட்டுள்ளனர். அப்போது பாலாஜி அவர்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.