Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்த வாலிபர்….. மாமனாரை கொலை செய்ய முயற்சி….. மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு….!!!

மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள துண்டுக்காடு வடக்கு தெருவில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மாயவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து உஷாவின் தந்தை சேகர் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மாயவேல் சரக்கு வாகனத்தை ஒட்டி தனது மாமனாரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக சேகர் உயிர் தப்பியதால் மாயவேல் தனது நண்பர்களான சிலம்பரசன், கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த சேகர் தற்போது பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாயவேல், கார்த்திகேயன் சிலம்பரசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |