டெல்லியில் சரோஜினி நகர் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி லேப்டாப், மொபைல் போன் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்தசம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் கொள்ளையர்களுக்கு அந்த விசாரணையில் பல பரபரப்புத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் பொருட்களுடன் தொடர்புடைய நபரை கட்டிப்போட்டு விட்டு அவருடைய ஸ்கூட்டி உள்ளிட்டவற்றை 3 பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் தன்னுடைய காதலி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு கொடுப்பதற்கு நினைத்துள்ளார். அதற்கு பணம் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தொடர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்டு உள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் விசாரணை நடத்தி குறைந்த நேரத்தில் குற்றவாளிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.