மகாலட்சுமி திருமணத்திற்கு முன்பாக தனக்கு போட்ட கண்டிஷன் குறித்து பேசி உள்ளார் ரவீந்தர்.
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் குறித்து இருவரையும் இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ரவீந்தர் மகாலட்சுமி தனக்கு போட்ட கண்டிஷன் குறித்து கூறியுள்ளார். அது என்னவென்றால், மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பொழுது தன்னுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார். தனக்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதை காரணம் காட்டியும், வயது, வேறுக்காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமியின் இந்த கண்டிஷனை கேட் என்னுடைய குடும்பத்தினர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்கள். முன்னதாக மகாலட்சுமி அனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்ற நிலையில் அவரை விவாகரத்து செய்து தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றார். மேலும் தனது 8 வயது மகனிடம் அனுமதி பெற்ற பிறகே ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.