காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் மண்டபத்துபாறை பகுதியில் வசித்து வரும் பழனியப்பன் என்பவருக்கு நர்மதா என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியயை சேர்ந்த தினேஷ்(21) என்ற வாலிபர் காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ் பழனியப்பன் வீட்டிற்க்கு சென்று தகராறு செய்துள்ளார்.
இதனையறிந்த பழனியப்பனின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக தினேஷ் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களான குப்புச்சிபாளையம் சனப்பன் காடு பகுதியை சேர்ந்த ஆனந்தன் (55) மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 7 பேரை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். தற்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குபதிவு செய்து தினேஷை கைது செய்துள்ளனர். இதனைதொடர்ந்து தினேஷ் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சந்திரன், சங்கர் ஆகிய 2 பேரை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள பழனியப்பன் மற்றும் சித்ரா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.