Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலர்களை துன்புறுத்திய வாலிபர்கள்…. இளம்பெண் தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது காதலன் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மூக்கையூர் கடற்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது 3 ரவுடிகள் காதலர்களை வழிமறித்து துன்புறுத்தியதோடு, அவர்களது செல்போனை பறித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்மாஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து காதலியுடன் ஊர் திரும்பிய ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஹரிகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை 19 வயது இளம்பெண் தனது வீட்டு தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த பெண்ணையும் பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |