காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று காதலர்கள் ரோஜா பூக்க்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று பிரபல ஆன்லைன் பூக்கடை வியாபாரி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள காதல் நகரமான பாரிஸில் பிரபலமான Fleurs d’ Ici எனும் ஆன்லைன் பூக்ககடை வியாபாரியான ஹோர்ட்டன்ஸ் ஹரங் என்பவர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று ரோஜா பூக்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று தன் வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார். காதலர் தினம் என்றாலே அனைத்து காதலர்களும் ரோஜா பூக்களை தான் பரிசாக கொடுத்து வருவார்கள் .
இந்நிலையில் இவரின் இந்த பேச்சுக்கு காரணம் தான் என்ன ? என்று வினவிய போது, அவர் கூறுகையில், இந்தப் பருவத்தில் ரோஜாக்கள் அட்சரேகைகளின் கீழ் வளர்வதில்லை. அதனால் ரோஜாக்கள் கென்யா, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து விமான சரக்கு மூலம்தான் இறக்குமதி செய்து பிரான்சில் விற்கப்படுகின்றன. இதில்காலநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன் உமிழ்வு அதிகமாக ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார். இவருடைய இந்த புதிய பிரச்சாரத்திற்கு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .இதனால் அவர் தன் வாடிக்கையாளர்களுக்கு வேறு சில அழகிய உள்ளூர் பூக்களை பரிந்துரை செய்கிறார்.