Categories
தேசிய செய்திகள்

காதலனோடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. 3 வாலிபர்கள் மாறி மாறி கூட்டு பலாத்காரம்….!!!!!

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியின மைனர் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி அங்குள்ள உள்ளூர் கிராம கண்காட்சிக்கு தன் காதலனோடு சென்று திரும்பினார். அப்போது அங்குள்ள ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆற்றங்கரையில் காதலர்கள் தனியாக இருப்பதை பார்த்த அந்த ஊர் வாலிபர்கள் மூவர்,காதலனை அடித்து விரட்டிவிட்டு அந்த சிறுமியை மாறி மாறி மூன்று பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அந்த காதலன் ஊர் மக்களை அந்த இடத்திற்கு அழைத்து வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |