Categories
மாநில செய்திகள்

“காதலனை கைபிடிப்பதற்காக மணப்பெண் செய்த வேலை”… போலீசில் புகார் கொடுத்த மணமகன்…!!!!

மணமேடையில் மணப்பெண் மயங்கி விழுந்ததைப் போல் நடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடி பகுதியில் உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இருக்கும் கிழக்கு தாம்பரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த (31) வயதான பெண் ஒருவருக்கும் இருவீட்டார சம்மதத்துடன் திருமணம் திருமண ஏற்பாடு செய்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை காலை பழைய வண்ணார்பேட்டை உள்ள காளிகாம்பாள் கோவிலில் வைத்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் அதிரடியாக நடந்துகொண்டிருந்தது. மாங்கல்யம் உறவினர்களின் ஆசீர்வாதத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் மணமேடைக்கு  எடுத்துக் கொண்டு வரப்பட்டது. அப்போது சினிமாவில் வருவது போல மணப்பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் அவரை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மணப்பெண்ணிடம் விசாரித்த போது தான் ஒருவரை காதலிப்பதாகவும் அதனால் இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் மயங்கி விழுவது போல் நடித்தேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மணமகன் தினகரன் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மணமகன் திருமணத்துக்கு செலவு செய்த பணம் , மணப்பெண்ணுக்கு கொடுத்த நகை ,புடவை போன்றவற்றை பெண் வீட்டார் திருப்பிக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதனடிப்படையில் மணமகள்  வீட்டாரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருமணத்திற்கான செலவு மற்றும்  நகைகளை கொடுப்பதாக ஒப்புக் கொண்டதையடுத்து பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது. இச்சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |