காதலனோடு தனிமையில் இருப்பதற்காக 3 வயது சிறுமியை கடத்தி சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாபில் ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் நிஷு திவேதி. இவர் அதே பகுதியை சேர்ந்த நவதீப் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனை மீறி இருவரும் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து தங்களின் உறவினர்களான 3 வயது சிறுமியை கடத்தி சென்று ஹோட்டலில் தாங்கள் கணவன் மனைவி என்று கூறி ரூம் எடுத்து தனிமையில் இருந்துள்ளார்.
இதையடுத்து குழந்தையை காணாததால் பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது நிஷா தங்கியிருந்த ஓட்டலை கண்டறிந்து அங்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.