Categories
தேசிய செய்திகள்

காதலனுக்கு எச்ஐவி பாசிட்டிவ்…. காதலி செய்த காரியம்…. வெளியான பகீர் தகவல்….!!!

அஸ்ஸாம்: கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர். அதில் இளைஞருக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இளைஞரை கண்டித்துள்ளனர். இருப்பினும் சிறுமி இளைஞருடன் 3 முறை வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து இருவரையும் தேடிப் பிடித்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இளைஞரை கைது செய்த நிலையில் அந்த சிறுமி, தனது காதலனுடன் இருக்கும்போது அவரது ரத்தத்தை ஊசி மூலம் எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டதாகவும், காதலனுடன் சேருவதற்காக இதனை செய்ததாகவும் கூறி சர்ச்சையை கிளப்பினார். அதோடு தனது காதலனை விடுவிக்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |