மொபட்டை திருடி சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை சமஸ்பிரான் தெருவில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னசெட்டி தெருவில் கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ஆம் தேதி நாராயணன் கடைக்கு அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் வெளியூருக்கு சென்ற நாராயணன் 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனை அடுத்து மொபட்டை எடுப்பதற்காக கடைக்கு சென்றபோது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது 15-ஆம் தேதி 2 மர்ம நபர்கள் மொபட்டை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து நாராயணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மொபட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.