காணாமல் போன மூன்று மாணவிகளின் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதி சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று மாலை அவர்களது வீட்டின் முன்பு இருந்தனர். திடீரென அவர்களை காணவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.