நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது, கடலில் திடீரென உருவான டவ்தே புயல் காரணமாக புயலில் சிக்கி கப்பல் மூழ்கி பலியானதாக தகவல் வெளியானது. இதை கேள்விப்பட்ட 10 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு தரக்கோரி இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் முதல்வரிடம் தகவல் கொடுத்ததையடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீட்டுத்தரகோரி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே விரைந்து மீனவர்களின் இருப்பிடத்தை கடற்படையினர் மூலம் கண்டறிந்து அவர்களை மீட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.