காணாமல் போன பென் டிரைவ்வை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொலைந்து போன பென் டிரைவ்வை கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாகஈர்த்தது. மணப்பாறையில் இன்று காலை முதல் ஒரு ஆம்னிவேனில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு அதில் ஒரு அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பில் கருப்பு நிறத்தில் உள்ள பென் டிரைவ் ஒன்றைக் காணவில்லை என்றும் எங்கு தொலைத்தது என்று தெரியவில்லை ஆகவே அந்த பென் டிரைவ்வை யாரேனும் கண்டெடுத்திருந்தாலோ அல்லது வைத்திருந்தாலோ கொடுத்து தக்க சன்மானம் பெற்றுக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.