அதிமுக பிரமுகரின் டிராக்டரை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் பகுதியில் சோலைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதிமுக பிரமுகரான இவரது டிராக்டர் கடந்த மாதம் திருடு போயிருந்துள்ளது. இதுகுறித்து அவர் நயினார் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் டிராக்டரை திருடியது நயினார்கோவிலை சேர்ந்த சேதுபதி என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் டிராக்டரை திருடி தென்காசியில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் சேதுபதி மீது வழக்குபதிவு செய்து கைது செய்த நிலையில் திருடிய டிரக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.