காட் பாதர் திரைப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என குறிப்பிட்டு பாடலை வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா.
மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது. இந்தநிலையில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ராஜா ஏக்கோ ராஜா என்ற பாடலை வெளியிட்டு தனக்கு மிகவும் பிடித்த பாடல் என குறிப்பிட்டு இருக்கின்றார். இந்த பாடலானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.