Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காட்பாடி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்”…. போலீசார் விசாரணை…!!!!!!

காட்பாடி ரயில்நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதை அடுத்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் இது பற்றி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைத்தார்கள். மேலும் இதுப்பற்றி வழக்கு பதிவு செய்து இறந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர்? யார்” என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |