அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழாயிரம்பண்ணை அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதி இன்றி சிலர் பட்டாசு தயாரித்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக பால்ராஜ், கிருஷ்ணசாமி, முனிஸ்வரன், ரவிச்சந்திரன், தங்கராஜ் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.