Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் அழைத்து சென்ற வாலிபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேக்குடி கிராமத்தில் கூலித் தொழிலாளியான தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனபால் அதே பகுதியில் வசிக்கும் 45 வயது பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஏற்றிச் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தனபால் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறி சத்தம் போட்டதால் தனபால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |