அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் ஓ. பண்ணீர் செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இருவருக்கும் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை தொற்றிக்கொண்டது. முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக ஆதரவாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் அதற்கும் ஒரு படி மேலே போய் பல இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
இதேபோல் காஞ்சிபுரம் பகுதியில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் தர்மமே வெல்லும் தர்மத்தின் நாயகரே நாளை முதல்வரே என்றும் அதிமுக தொண்டர்கள் உங்கள் பக்கம் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளனர். இன்று சுவரொட்டியை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி ரஞ்சித்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். மேலும் போஸ்டர் ஒட்டிய பிறகு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.