காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி யசோதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி யசோதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 75. 1980 – 84, 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஸ்ரீபெரம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.