Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காங்கிரஸ் கமிட்டி சார்பாக முப்பெரும் விழா”…. மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்….!!!!!

ஆறுமுகநேரியில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், சிவாஜி கணேசன் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி தலைமை தாங்க பொதுச் செயலாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

இவ்விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சிவசுப்பிரமணியன், மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவர் சிந்தியா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுக் கொண்டு பேசினார்கள். பின்னர் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதன்பின் அன்னதானம் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Categories

Tech |