நடிகர் விவேக்கின் பழைய பதிவு ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும், கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் நினைவலைகளை அவருடன் நடித்த நடிகர்கள் நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
#viveksir 💔 pic.twitter.com/e9irqWF1U4
— aishwarya rajesh (@aishu_dil) April 18, 2021
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விவேக்கின் பழைய டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படத்துடன் ‘காக்கா முட்டை படத்தில் நடித்தவரா இவர்? என்ன ஒரு மாற்றம். அழகு மற்றும் திறமை இரண்டும் ஒருங்கே அமைந்த நடிகை’ என விவேக் பதிவிட்டுள்ளார்.