தேனியில் சூறைக் காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகியது.
தேனி மாவட்டத்திலிருக்கும் வெட்டுக்காடு, ஆங்கூர் பாளையம், கூடலூர் உட்பட சில இடங்களில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தின் மூலமாக ஒட்டுரக திசு வாழையை பயிர் செய்து வருகின்றனர். இதிலும் குறிப்பாக இந்த இடங்களில் நேந்தரம், பூவன், செவ்வாழை போன்றவைகளை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது வாழை மரங்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்து, தார்கள் நன்கு முற்றி அறுவடை செய்ய இருந்தது.
இந்த நிலையில் கூடலூர் உட்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலிருந்த தனியார் தோட்டத்தில் சுமார் 15,000 மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமாகியது. இதனை அப்பகுதியிலிருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களான முருகன், ஜெயலஷ்மி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.