Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கவின்-லாஸ்லியா காதல் விவகாரம்… காதல் பற்றி கூறிய கவின்…!!!

நடிகர் கவின் காதல் பற்றி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளர்களாக கவின் மற்றும் லாஸ்லியா பங்கேற்றிருந்தனர். இவர்கள் பிக்பாஸ் வீட்டில் காதலித்து வந்தனர். பின் பிக்பாஸை விட்டு வெளியே வந்தவுடன் இவர்கள் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது. ஆனால் இவர்கள் இதுகுறித்து பேசியதில்லை.

இந்நிலையில் கவின் காதல் குறித்து பேசியதாவது, காதல் என்பது ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான புரிதலை கொண்டது. எதுவாக இருந்தாலும் நாம் உண்மையாக நேசிக்கிற விஷயங்கள் மற்றும் உண்மையாக நேசிக்கின்றவர்களுக்காக இறுதிவரையில் உண்மையாக இருக்க வேண்டும். அந்தக் காதலுக்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்லலாம். இதுவரையிலும் நான் அப்படி ஒரு நபரை நான் பார்த்ததில்லை. அவரை நான் தேடிக் கொண்டுதான் இருக்கின்றேன். கண்டிப்பாக ஒருநாள் எனக்கு அமையும். எனக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் என நம்புவதாக கூறியுள்ளார். மேலும் இறுதிவரை என் தொழிலையும் நேசிப்பேன். அதுதான் எனக்கு சோறு போடுகின்றது எனக் கூறியிருக்கின்றார் கவின்.

Categories

Tech |